ADDED : ஆக 04, 2024 11:13 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி, 60. இங்குள்ள பஜாரில் பழயை இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் காலை புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் முத்துசெல்வன், 22 என்பவர் வந்தார். அவர் ராஜாமணியிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து 200 ரூபாயை பறித்து சென்றார்.
இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார் முத்துசெல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.