ADDED : ஜூலை 09, 2024 11:01 PM
பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, மொன்னவேடு கிராமத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு கடையில் சோதனை செய்ததில், ஹான்ஸ், 10, விஐ 20 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடையில் இருந்த கனிகேஸ்வரி, 60 கைது செய்யப்பட்டார்.