/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கலை போட்டியில் வெற்றி இளைஞர்களுக்கு பரிசு கலை போட்டியில் வெற்றி இளைஞர்களுக்கு பரிசு
கலை போட்டியில் வெற்றி இளைஞர்களுக்கு பரிசு
கலை போட்டியில் வெற்றி இளைஞர்களுக்கு பரிசு
கலை போட்டியில் வெற்றி இளைஞர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 20, 2024 06:05 AM
திருவள்ளூர்: கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த கலை போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் 17-35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு குரலிசை, கருவி இசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய ஐந்து பிரிவுகளில், கடந்த மார்ச் 10ல், ஆவடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
குரலிசை பிரிவில் முதல் மூன்று இடங்களில், கவுதம், சாருகாசி, தவசீலி; கருவி இசையில், வெங்கடேஸ்வரன் - நாதஸ்வரம், தினேஷ்-தவில், குகன் - நாதஸ்வரம் ஆகிய பிரிவில் வெற்றி பெற்றனர்.
பரதநாட்டியம் பிரிவில் சுகி பிரார்த்தனா, வனமாலிகா, கிரிதர்ஷினி;கிராமிய நடன பிரிவில் பிரசன்னா, ஷியாம் கிஷோர், கவுதமி;ஓவிய பிரிவில் மணிகண்டன், அபிராமி, லிவ்யஸ்ரீ ஆகியோர் வெற்றிபெற்றனர்.
வெற்றி பெற்ற 15 பேருக்கும், முறையே 6,000, 4,500 மற்றும் 3,500 ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் கலெக்டர் பிரபுசங்கர் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.