/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தலைவிரித்தாடும் பேனர் கலாசாரம் கடம்பத்துாரில் கட்டுப்படுத்தப்படுமா? தலைவிரித்தாடும் பேனர் கலாசாரம் கடம்பத்துாரில் கட்டுப்படுத்தப்படுமா?
தலைவிரித்தாடும் பேனர் கலாசாரம் கடம்பத்துாரில் கட்டுப்படுத்தப்படுமா?
தலைவிரித்தாடும் பேனர் கலாசாரம் கடம்பத்துாரில் கட்டுப்படுத்தப்படுமா?
தலைவிரித்தாடும் பேனர் கலாசாரம் கடம்பத்துாரில் கட்டுப்படுத்தப்படுமா?
ADDED : ஜூன் 29, 2024 02:11 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் கடம்பத்துார், பேரம்பாக்கம், மணவாள நகர், கொண்டஞ்சேரி, மப்பேடு, கீழ்நல்லாத்துார், மேல்நல்லாத்துார் உட்பட பல இடங்களில் திருமணம், பிறந்தநாள், நினைவஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
இதில் கீழ்நல்லாத்துார் பேருந்து நிறுத்தம் அருகே மற்றும் மணவாள நகரில் ரயில்வே மேம்பாலம் நுழைவுப் பகுதியில் விளம்பர பேனர் வைப்பது தொடர்கதையாகவே நடந்து வருகிறது.
இதேபோல், கடம்பத்துார் ஒன்றிய அலுவலகம் அருகே பேனர் வைப்பதும் அதிகரித்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பேனர் வைப்பது மற்றும் கொடிக்கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.