ADDED : ஜூன் 29, 2024 02:13 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே காந்தி பூங்கா அமைந்துள்ளது. கம்பி வேலியுடன் இருந்த இந்த பூங்காவில், சமூக விரோதிகள் இரவு, பகல் என எந்நேரமும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, இந்த பூங்காவுக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. அத்துடன் பூங்கா மூடப்பட்டது. பொதட்டூர்பேட்டையில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை செல்லும் சாலையை ஒட்டி சுற்றுச்சுவரும், அதையொட்டி திண்ணையும் கட்டப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் இடநெருக்கடியால் தவித்து வருகின்றனர். மேலும், பூங்கா நுழைவாயிலை ஒட்டி மெகா சைஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த பகுதியில் விபத்து அபாயம் நிலவுகிறது. அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்களை கட்டுப்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.