/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உண்டு உறைவிட பள்ளி மீண்டும் செயல்படுமா? உண்டு உறைவிட பள்ளி மீண்டும் செயல்படுமா?
உண்டு உறைவிட பள்ளி மீண்டும் செயல்படுமா?
உண்டு உறைவிட பள்ளி மீண்டும் செயல்படுமா?
உண்டு உறைவிட பள்ளி மீண்டும் செயல்படுமா?
ADDED : ஜூலை 18, 2024 01:14 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டைஒன்றியம் தாமனேரியில், 10 ஆண்டுகளுக்கு முன் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வந்தது. அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் இந்த பள்ளி செயல்பட்டு வந்தது.
இந்த வளாகத்தில் மாணவர்களின் வசதிக்காக கழிப்பறை, குளியல் அறை என, கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள்பலரும் தங்கி படித்துவந்தனர்.
மலையடிவாரத்தைஒட்டிய இயற்கையான சூழலில் மாணவர்கள் படித்து வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன், நிதிப்பற்றாக்குறை காரணமாக பள்ளி மூடப்பட்டது. இங்கிருந்தமாணவர்கள் மாவட்டத்தின் இதர பகுதியில் செயல்படும் பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது, இந்தவளாகம் பயன்பாடின்றி, புதர் மண்டி சீரழிந்துவருகிறது. மாணவர்கள்இங்கு படித்து வந்த காலகட்டத்தில், முறையாக பராமரிக்கப்பட்டவளாகம், தற்போதுபாழடைந்து வருவதுபகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில்அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக, இந்த வளாகத்தில் மீண்டும் உண்டு உறைவிட பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.