/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு காமராஜர் சிலை அருகில் கடும் நெரிசல் டோல்கேட் அருகே சோதனை நடத்த எதிர்பார்ப்பு கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு காமராஜர் சிலை அருகில் கடும் நெரிசல் டோல்கேட் அருகே சோதனை நடத்த எதிர்பார்ப்பு
கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு காமராஜர் சிலை அருகில் கடும் நெரிசல் டோல்கேட் அருகே சோதனை நடத்த எதிர்பார்ப்பு
கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு காமராஜர் சிலை அருகில் கடும் நெரிசல் டோல்கேட் அருகே சோதனை நடத்த எதிர்பார்ப்பு
கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு காமராஜர் சிலை அருகில் கடும் நெரிசல் டோல்கேட் அருகே சோதனை நடத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 18, 2024 01:13 AM

திருவள்ளூர்:
காமராஜர் சாலை சந்திப்பில் கனரக வாகனங்களை நிறுத்தி, அபராதம் விதிக்கும் போலீசாரால், தினமும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, டோல்கேட் அருகில் போலீசார் வாகன தணிக்கை செய்ய சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பதி, திருத்தணியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும், திருப்பாச்சூரில் இருந்து சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை வழியாக பயணிக்கின்றன.
இச்சாலை வழியாக தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் நிலையில், சி.வி.நாயுடு சாலை மற்றும் தெற்கு குளக்கரை தெரு - ஜே.என்.சாலை சந்திக்கும் இடத்தில் காமராஜர் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை சீரமைக்கின்றனர்.
அப்போது, கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து, உரிய அனுமதியில்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
இவ்வாறு சாலை நடுவில் கனரக வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிப்பதால், இச்சாலை சந்திப்பில் தினமும் நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே, சவுடு மண் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களால் நெரிசல் நிலவி வரும் நிலையில், போலீசாரின் நடவடிக்கையால் செயற்கை நெரிசல் நிலவுகிறது.
இதை தவிர்க்க, கனரக வாகனங்களை, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள டோல்கேட் சந்திப்பில் நிறுத்தி வாகன சோதனை செய்தால், செயற்கை நெரிசல் குறையும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.