/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மதுக்கூடமாக மாறும் வி.ஏ.ஓ., அலுவலக வளாகம் அம்மையார்குப்பத்தில் அவலம் மதுக்கூடமாக மாறும் வி.ஏ.ஓ., அலுவலக வளாகம் அம்மையார்குப்பத்தில் அவலம்
மதுக்கூடமாக மாறும் வி.ஏ.ஓ., அலுவலக வளாகம் அம்மையார்குப்பத்தில் அவலம்
மதுக்கூடமாக மாறும் வி.ஏ.ஓ., அலுவலக வளாகம் அம்மையார்குப்பத்தில் அவலம்
மதுக்கூடமாக மாறும் வி.ஏ.ஓ., அலுவலக வளாகம் அம்மையார்குப்பத்தில் அவலம்
ADDED : ஜூன் 26, 2024 12:01 AM

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ளது காண்டாபுரம் வி.ஏ.ஓ., அலுவலகம்.
இந்த அலுவலகத்திற்கு பல்வேறு அத்தியாவசிய சான்றுகள் பெறுவதற்காக, பகுதிவாசிகள் வந்து செல்கின்றனர். எதிரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப மருத்துவமனைக்கும் தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், இரவு நேரத்தில் மதுபிரியர்கள் இங்கு மது அருந்த கூடுகின்றனர்.
பின், காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை இங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், இந்த வழியாக பயணிப்பவர்களும், அரசு மருத்துவமனைக்கு வருபவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் இந்த வளாகத்தில் மது அருந்துபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.