/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விடையூர் செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விடையூர் செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
விடையூர் செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
விடையூர் செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
விடையூர் செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : ஜூன் 26, 2024 12:42 AM

கடம்பத்துார், விடையூர் வடபாதி செல்லியம்மன் கோவில் 48வது ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 14தேதி காப்பு கட்டி துவங்கியது.
தினமும் சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் வடபாதி செல்லியம்மன் வீதியுலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
பின் கொல்லாபுரி அம்மன், செல்லியம்மன் மற்றும் வடபாதி செல்லியம்மன் ஆகிய மூன்று அம்மன்கள் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
திருவிழாவில் விடையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான கலியனுார், மணவூர், கடம்பத்துார், வெண்மனம்புதுார், திருப்பாச்சூர் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.