/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊத்துக்கோட்டை --- சிறுவாபுரி பேருந்து இயக்க கோரிக்கை ஊத்துக்கோட்டை --- சிறுவாபுரி பேருந்து இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை --- சிறுவாபுரி பேருந்து இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை --- சிறுவாபுரி பேருந்து இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை --- சிறுவாபுரி பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2024 08:08 PM
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே சிறுவாபுரி கிராமத்தில் உள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர்.
குறிப்பாக, செவ்வாய்க்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடியற்காலை முதல் தரிசனத்திற்கு காத்திருப்பர். ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ஏராளமான பக்தர்கள் இங்கு சுவாமியை தரிசனம் செய்ய செல்வர்.
ஊத்துக்கோட்டையில் இருந்து சிறுவாபுரி கிராமத்திற்கு நேரடி பேருந்து இயக்குவதில்லை.
இதில் இப்பகுதியில் இருந்து செல்லும் பக்தர்கள் பெரியபாளையம் சென்று அங்கிருந்து, ஆரணி சென்று பின்னர் ேஷர் ஆட்டோ மூலம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளது.இதனால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து அமாவாசை, பவுர்ணமி நாட்களில், மேல்மலையனுார், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது போல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஊத்துக்கோட்டையில் இருந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.