ADDED : ஜூன் 29, 2024 08:09 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள் ஒழிக்க வேண்டும் என, எஸ்.பி.,ஸ்ரீநிவாசபெருமாள் உத்தரவிட்டார்.
இதையடுத்து,திருவள்ளூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட, திருவள்ளூர் டவுன், தாலுகா, மணவாளநகர் மற்றும் மப்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கடைகளில் மறைத்து வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 2 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கூனிப்பாளையம் லட்சுமணராஜ், 51, பூங்கா நகர் விஸ்வாசம், 72, சிறுவானுார் மதன்குமார், 40, மணவாளநகர் வெங்கடேசன், 32, மப்பேடு அடுத்த முதுகூர் மோகனா, 45 ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.