ADDED : ஜூன் 17, 2024 02:54 AM
கும்மிடிப்பூண்டி, : கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கரிமேடு அருகே டூ--வீலர் ஒன்றை நிறுத்த முற்பட்டனர். டூ--வீலரில் சென்ற இருவர் கத்தியை காண்பித்து போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், 31, அஜித், 21, ஆவர். இருவர் மீதும் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.