/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குண்டும் குழியுமாக மாறிய கசுவா கிராம சாலை குண்டும் குழியுமாக மாறிய கசுவா கிராம சாலை
குண்டும் குழியுமாக மாறிய கசுவா கிராம சாலை
குண்டும் குழியுமாக மாறிய கசுவா கிராம சாலை
குண்டும் குழியுமாக மாறிய கசுவா கிராம சாலை
ADDED : ஜூன் 17, 2024 02:55 AM

திருவள்ளூர்: திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் இருந்து கசுவா கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதிவாசிகள் பயணிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் தாலுகா, திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக, கசுவா கிராமம் அமைந்துள்ளது.
இங்கு, சேவாலயா தொண்டு நிறுவன பள்ளி மற்றும் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன.
இந்த நிலையில், ராமநாதபுரம் கிராமத்தில் இருந்து கசுவா கிராமத்திற்கு செல்லும் சாலை ஒரு கி.மீ., துாரம் வரை சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே, பெரிய பள்ளங்கள் உள்ளதால், சமீபத்தில் பெய்த மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
இதனால், இச்சாலையில் இருசக்கர வாகனஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணம் செய்கின்றனர். பள்ளி வாகனம், செல்ல முடியாத அளவிற்கு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
கிராமவாசிகள் சாலையில் நடக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, திருவள்ளூர் ஒன்றிய நிர்வாகம், கசுவா கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சின்னகடம்பூர் சாலை
திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் ஊராட்சியில், சின்னகடம்பூர் கிராமம், சின்னகடம்பூர் மோட்டூர் கிராமம், இருளர் காலனி மற்றும் அருந்ததி காலனி ஆகியவற்றில்,750 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு திருத்தணி மற்றும் குருவராஜப்பேட்டை ஆகிய இடங்களுக்கு வாகனங்களில் சென்று வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணி—குருவராஜப்பேட்டை கூட்டுச்சாலையில் இருந்து சின்னகடம்பூர் ஊராட்சிக்கு செல்லும் தார்ச்சாலைகள் முறையாக பராமரிப்பு இல்லாததால், தற்போது பல்லாங்குழிகளாக மாறியுள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயித்திற்கும் பயன்படுத்தப்படும் டிராக்டர், நாற்று நடும் இயந்திரம், நெல் அறுவடை செய்யும் இயந்திரம் போன்ற வாகனங்கள் தார்ச்சாலையில் செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.
சாலை ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.
பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒவ்வொரு கிராம சபையிலும் புகார் தெரிவித்து மனு கொடுத்தும் பலனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சின்னகடம்பூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.