ADDED : ஜூலை 26, 2024 01:27 AM
கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து நிறுத்தி, பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன், 67, வரிச்சூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 63, ஆகியோரிடம், 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.