/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயில் நிலைய பணி 'விறுவிறு' டிசம்பருக்குள் திறக்க முடிவு ரயில் நிலைய பணி 'விறுவிறு' டிசம்பருக்குள் திறக்க முடிவு
ரயில் நிலைய பணி 'விறுவிறு' டிசம்பருக்குள் திறக்க முடிவு
ரயில் நிலைய பணி 'விறுவிறு' டிசம்பருக்குள் திறக்க முடிவு
ரயில் நிலைய பணி 'விறுவிறு' டிசம்பருக்குள் திறக்க முடிவு
ADDED : ஜூலை 26, 2024 02:13 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம், 'அம்ருத் பாரத்' மேம்பாட்டு திட்டத்தில், 28.82 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகராக திகழும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் ஒன்றரை லட்சம் பேர் சென்னை, அரக்கோணம் மற்றும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு பயணிக்கின்றனர்.
இங்கு, தினமும் 350க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள், ஒன்பது விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த நிலையில், 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், இந்த ரயில் நிலையம், 28.82 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரயில் நிலைய நுழைவு வாயில், புதிய டிக்கெட் கவுன்டர்கள், ஆறு நடைமேடைகளில் கூரை, ரயில் நிலையத்தின் இரு பகுதியிலும் 'லிப்ட்' வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும், பாழடைந்த கட்டடங்கள் அகற்றப்பட்டு, இருசக்கர வாகன நிறுத்தும் இடம் தயாராக உள்ளது. ரயில்வே சுரங்கப்பாதையையும் மழை காலத்தில் தண்ணீர் வராமல் இருக்கும் வகையில், பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு வரும் என, ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.