/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கல்லுாரி மாணவரை தாக்கிய இருவர் கைது கல்லுாரி மாணவரை தாக்கிய இருவர் கைது
கல்லுாரி மாணவரை தாக்கிய இருவர் கைது
கல்லுாரி மாணவரை தாக்கிய இருவர் கைது
கல்லுாரி மாணவரை தாக்கிய இருவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 04:50 AM
திருத்தணி: திருத்தணி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி, 21. இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லுாரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது விடுமுறை என்பதால் கோபி வீட்டில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு, திருத்தணி நேரு நகர் அசாம்முகமத், 24, சித்துார் சாலையை சேர்ந்த இளங்கோவன், 24, சதீஷ்குமார், வெங்கடேச பெருமாள் ஆகிய நான்கு பேர் கோபி வீட்டிற்கு வந்து பணம் கேட்டு மிரட்டினர்.
நேற்று முன்தினம் நால்வரும் கோபியை பாட்டிலால் தலையில் அடித்தும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தும் தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த கோபி, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இது குறித்து கோபி கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து அசாம்முகமத், இளங்கோவன் ஆகிய இருவரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.