/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாணவர் விடுதி சேர்க்கை விண்ணப்பிக்க நாளை இறுதி மாணவர் விடுதி சேர்க்கை விண்ணப்பிக்க நாளை இறுதி
மாணவர் விடுதி சேர்க்கை விண்ணப்பிக்க நாளை இறுதி
மாணவர் விடுதி சேர்க்கை விண்ணப்பிக்க நாளை இறுதி
மாணவர் விடுதி சேர்க்கை விண்ணப்பிக்க நாளை இறுதி
ADDED : ஜூன் 13, 2024 12:23 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, 33 மற்றும் ஒரு கல்லுாரி மாணவர் விடுதி என, மொத்தம் 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில், நான்கு முதல் பிளஸ் 2 வரையும், கல்லுாரி விடுதியில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படிப்புகளில் பயில்வோர் சேர தகுதியுடையவர்.
விடுதிகளில் சேர்வோருக்கு, மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச சீருடை, சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நுால் வழங்கப்படும். விடுதியில் சேர்வோரின் பெற்றோர் ஆண்டு வருவாய், 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
தகுதியுடையோர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில், வரும் 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.