/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருநங்கையர் நலத்திட்ட உதவி பெற 21ல் முகாம் திருநங்கையர் நலத்திட்ட உதவி பெற 21ல் முகாம்
திருநங்கையர் நலத்திட்ட உதவி பெற 21ல் முகாம்
திருநங்கையர் நலத்திட்ட உதவி பெற 21ல் முகாம்
திருநங்கையர் நலத்திட்ட உதவி பெற 21ல் முகாம்
ADDED : ஜூன் 13, 2024 12:22 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருநங்கையர் நலவாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் 21ல் நடக்க உள்ளது. இம்முகாமில், திருநங்கையருக்கான இணையதள அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இந்த முகாம், வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையர் மற்றும் அவர்களுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.