/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு சேவை மையம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு சேவை மையம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு சேவை மையம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு சேவை மையம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு சேவை மையம்
ADDED : ஜூன் 15, 2024 09:13 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் அரசு மருத்துவமனையில், பெண்களுக்கு கூடுதல் சேவை மையம் கட்டுமான இடம் தேர்வு செய்யப்பட்டது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பெண்களுக்கான கூடுதல் சேவை மைய வளாகம் கட்டுமான பணிக்கு கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்து, இடம் தேர்வு செய்தார். பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் திருத்தணி அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது.
தற்பொழுது கூடுதலாக அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. 'ஒன் ஸ்டாப்' மையங்கள், மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது சமூக நலத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி, உதவி கலெக்டர்- பயிற்சி ஆயுஷ் குப்தா, துணை முதல்வர் மருத்துவர் திலகவதி, மருத்துவமனை நிலைய அலுவலர் ராஜ்குமார், பொதுபணித்துறை செயற்பொறியாளர் விஜய்ஆனந்த், மாவட்ட சமூக நல அலுவலர் வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.