/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீப்பாச்சி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு தீப்பாச்சி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
தீப்பாச்சி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
தீப்பாச்சி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
தீப்பாச்சி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
ADDED : ஜூன் 18, 2024 06:08 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு பகுதியில் செங்குன்றம் செல்லும் சாலையோரம் அமைந்துள்ளது தீப்பாச்சி அம்மன் கோவில்.
நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அடுத்த மாதம் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் நேற்று திருட்டு நடந்துள்ளது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்டியலில் சுமார் 1 லட்சம் ரூபாய் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார் கோவிலில் உள்ள சி.சி.டி.வி., யில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.