/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காவல் நிலையம் அருகே இரு கடைகளில் திருட்டு காவல் நிலையம் அருகே இரு கடைகளில் திருட்டு
காவல் நிலையம் அருகே இரு கடைகளில் திருட்டு
காவல் நிலையம் அருகே இரு கடைகளில் திருட்டு
காவல் நிலையம் அருகே இரு கடைகளில் திருட்டு
ADDED : ஜூன் 18, 2024 06:09 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காவல் நிலையம் அருகே உள்ள பஜார் பகுதியில் நாகலிங்கம், பாலமுருகன் ஆகிய இருவரும் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது நாகலிங்கம் கடையில் 3,500 ரூபாய், பாலமுருகன் கடையில் 2,500 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. மேலும் இதே பகுதியில் பன்னீர்செல்வம் என்பவரது பெட்டி கடையில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. திருவள்ளூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காவல் நிலையம் அருகே உள்ள இரு மளிகை கடைகளில் திருட்டு நடந்துள்ளது திருவள்ளூர் வியாபாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் காவலர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டுமென்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.