/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குடிநீர் தொட்டி சுத்தம் செய்த தொழிலாளி பலி குடிநீர் தொட்டி சுத்தம் செய்த தொழிலாளி பலி
குடிநீர் தொட்டி சுத்தம் செய்த தொழிலாளி பலி
குடிநீர் தொட்டி சுத்தம் செய்த தொழிலாளி பலி
குடிநீர் தொட்டி சுத்தம் செய்த தொழிலாளி பலி
ADDED : ஜூலை 22, 2024 01:45 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், ஈசாணி மூர்த்தி கோவில் தெருவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, இவரது வீட்டின் குடிநீர் தொட்டி பராமரிப்பு பணி, நேற்று மாலை நடந்தது.
குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், மூர்த்தி, அருள் மற்றும் மீஞ்சூரைச் சேர்ந்த ரகு, 40, ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, தொட்டியை சுத்தம் செய்யும் பணி முடிந்து, ஊழியர்கள் வெளியே வந்துள்ளனர்.
ஆனால், ரகு திடீரென மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ ஊழியர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த, திருவொற்றியூர் போலீசார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.