/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம் வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம்
வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம்
வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம்
வாலிபர் சடலமாக மீட்பு நண்பர்கள் கொன்றது அம்பலம்
ADDED : ஜூலை 22, 2024 02:26 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் அடுத்துள்ள முருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் பிரவீன்குமார், 19.
இரும்புக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 10ம் தேதி இரவு, வீட்டிற்கு அருகிலுள்ள ஏரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் ரேவதி, கடந்த 12ம் தேதி அளித்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், பிரவீன்குமாருக்கும், அவரது நண்பர்களான கொப்பூர் காலனி யோகரத்தினம் என்ற அஜய், 26, குச்சிக்காடு ரவி, 27, கொப்பூர்தமிழ், 21, சாரதி என்ற கோழி, 21, முருக்கஞ்சேரி கிருஷ்ணன், 27, மற்றும் 17 வயது சிறுவன்ஆகிய ஆறு பேருக்கும், டூ - வீலர் திருட்டு சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த ஆத்திரத்தில் அவர்கள், சம்பவத்தன்று பிரவீன்குமாரை அழைத்துச் சென்று கொலை செய்து, கொப்பூர் முந்திரி தோப்பில் புதைத்தது தெரிந்தது. இதையடுத்து மணவாள நகர் போலீசார் நேற்று, பிரவீன்குமார் உடலை தோண்டி எடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேற்கண்ட ஆறு பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.