/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பட்டா கேட்டு விஷத்துடன் வந்த தொழிலாளி கைது பட்டா கேட்டு விஷத்துடன் வந்த தொழிலாளி கைது
பட்டா கேட்டு விஷத்துடன் வந்த தொழிலாளி கைது
பட்டா கேட்டு விஷத்துடன் வந்த தொழிலாளி கைது
பட்டா கேட்டு விஷத்துடன் வந்த தொழிலாளி கைது
ADDED : ஜூலை 17, 2024 12:30 AM
திருவள்ளூர்,
திருத்தணி அடுத்த அருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிரி, 53. கூலி வேலை செய்து வரும் இவர் தன் தந்தையின் நிலத்தில் தன் பெயரையும் சேர்த்து கூட்டு பட்டா கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன் திருத்தணி ஆர்.டி.ஓ.., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், நேற்று முன்தினம் மதியம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கூட்டு பட்டா கேட்டு விஷ மருந்துடன் வந்துள்ளார். பட்டா கிடைக்காவிட்டால் விஷம் குடித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மதன் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் கிரியை கைது செய்து விசாரித்து வந்தனர்.