/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஸ்ரீகாளிகாபுரத்தில் தோப்பாக மாறிய அரசு பள்ளி வளாகம் ஸ்ரீகாளிகாபுரத்தில் தோப்பாக மாறிய அரசு பள்ளி வளாகம்
ஸ்ரீகாளிகாபுரத்தில் தோப்பாக மாறிய அரசு பள்ளி வளாகம்
ஸ்ரீகாளிகாபுரத்தில் தோப்பாக மாறிய அரசு பள்ளி வளாகம்
ஸ்ரீகாளிகாபுரத்தில் தோப்பாக மாறிய அரசு பள்ளி வளாகம்
ADDED : ஜூலை 17, 2024 12:29 AM

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரத்தில், 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் நடுவே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கிராமத்தின் மேற்கில் பஞ்சாட்சர மலையடிவாரத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
துவக்கத்தில் இந்த புதிய வளாகம், பொட்டல் காடாக காணப்பட்டது. பள்ளி வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் ஏதும் இன்றி மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
பின், ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், இந்த பள்ளி வளாகத்தில், ஏராளமான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வந்தனர்.
இதன் காரணமாக தற்போது இந்த வளாகம், தோப்பாக மாறியுள்ளது. மூன்றடுக்கு வகுப்பறை கட்டடமே வெளியில் தெரியாத அளவிற்கு மரங்கள் வளர்ந்துள்ளன. இயற்கையான சூழலில் மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர்.
இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பகுதிவாசிகள் பாராட்டி வருகின்றனர்.இயற்கையான சூழலில் பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்திற்கு, நுழைவாயில் பகுதியில் சுற்றுச்சுவரும் இல்லை. வாயிற்கதவும் இல்லை. இதனால், பள்ளி வளாகத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.