/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் கலெக்டரை கண்டித்து ஆளும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கலெக்டரை கண்டித்து ஆளும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் கலெக்டரை கண்டித்து ஆளும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் கலெக்டரை கண்டித்து ஆளும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் கலெக்டரை கண்டித்து ஆளும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 11:13 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டரை கண்டித்து, ஆளும் தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., - இ.கம்யூ., - ம.தி.மு.க., மற்றும் வி.சி., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இ.கம்யூ., மாவட்ட செயலர் கஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில கட்டுப்பாட்டு தலைவர் சுந்தர்ராஜன், ம.தி.மு.க., மாவட்ட செயலர் பாபு, வி.சி., மாவட்ட செயலர்கள் தளபதி சுந்தர், நீலமேகம் தலைமை வகித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:
கும்மிடிப்பூண்டியில் பர்மா அகதிகள் முகாமில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது, ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில். 100க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றி, மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
மனு அளிப்பதற்காக பொதுமக்களுடன் வரும் மக்கள் பிரதிநிதிகளையும், ஆசிரியர்களையும் கலெக்டர் ஒருமையில் பேசி அவமதித்து வருகிறார்.
மேலும், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்களிடம் ஒருமையில் பேசுகிறார். தினமும் ஏராளமான மக்கள் சந்திக்க கூடிய கலெக்டரின் நடவடிக்கையில் மாற்றம் இல்லாத போது, மக்களுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படும் அவரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,வின் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.