/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கழிவுநீர் குளமாக மாறிய சாலை திருமழிசை பகுதியில் அவதி கழிவுநீர் குளமாக மாறிய சாலை திருமழிசை பகுதியில் அவதி
கழிவுநீர் குளமாக மாறிய சாலை திருமழிசை பகுதியில் அவதி
கழிவுநீர் குளமாக மாறிய சாலை திருமழிசை பகுதியில் அவதி
கழிவுநீர் குளமாக மாறிய சாலை திருமழிசை பகுதியில் அவதி
ADDED : ஜூன் 20, 2024 12:59 AM

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் கடந்த 2007ம் ஆண்டு 40.60 கோடி ரூபாய் செலவில், சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணி 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.
ஆனாலும், பாதாள சாக்கடையின் பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால், சாலையில் பகுதிவாசிகள் மற்றும்பள்ளிக்கு செல்லும்மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டர் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.