Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பை குவித்து எரிப்பதை தடுக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பை குவித்து எரிப்பதை தடுக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பை குவித்து எரிப்பதை தடுக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பை குவித்து எரிப்பதை தடுக்க கோரிக்கை

ADDED : ஜூன் 20, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், ஏரிக்கரை அருகே தினசரி டன் கணக்கில் குப்பை குவித்து எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே, கும்மிடிப்பூண்டி ஈசா பெரிய ஏரிக்கரையை ஒட்டி, எப்போதும் மலை போல் குப்பை குவியல் காணப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், சுற்றியுள்ள ஊராட்சி நிர்வாகங்கள், தனியார் தொழிற்சாலைகள்,தினசரி டன் கணக்கில்குப்பையை குவித்து, எரித்து வருகின்றன.

எப்போதும் துர்நாற்றம்வீசும் அப்பகுதியில், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குப்பையைஎரிக்கும் போது அதில் இருந்து கிளம்பும் சாம்பல் துகள்கள்,அருகில் உள்ள ஏரி நீரில் கலந்து மாசடைகிறது. மேலும், அவ்வழியாகபயணிக்கும் வாகன ஓட்டி களுக்கு கண் எரிச்சல்,மூச்சுத்திணறல் ஏற்படகாரணமாக இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலையின் அழகை சீர்குலைப்பதுடன், சுகாதாரமற்ற சூழலை கண்டு, மக்கள் கடும் அதிருப்தியில்உள்ளனர்.

'கழிவுகளை கொட்டாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என தேசிய நெடுஞ்சாலை ஆணையம்மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், அறிவிப்புபலகை வைத்தும்பலனில்லை.

தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பையை குவித்து எரிப்பவர் மீது கடும்நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us