ADDED : ஜூன் 20, 2024 12:53 AM
பொதட்டூர்பேட்டை:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையை சேர்ந்தவர் ஹேமாத்ரி, 37, அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து கோணசமுத்திரத்திற்கு அரசு பேருந்து தடம் எண்: டி27 ஓட்டி சென்றார்.
அப்போது, கோணசமுத்திரம் காலனியை சேர்ந்த மணி மகன் பிரபாகர், 38, என்பவர், ஹேமாத்ரியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹேமாத்ரியை தாக்கியுள்ளார்.
இது குறித்து ஓட்டுனர் ஹேமாத்ரி, பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார், பிரபாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.