ADDED : ஜூன் 20, 2024 12:53 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் வசித்தவர் டில்லி, 71. நேற்று முன்தினம் மாலை, பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி டூ- -வீலரில் சென்றுக்கொண்டிருந்தார்.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டை பகுதியில், பின்னால் வந்த லாரி ஒன்று அவர் சென்ற டூ-- வீலர் மீது மோதியது.
படுகாயம் அடைந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.