Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பனைமரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வாரிய தலைவர் நேரில் விசாரணை

பனைமரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வாரிய தலைவர் நேரில் விசாரணை

பனைமரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வாரிய தலைவர் நேரில் விசாரணை

பனைமரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வாரிய தலைவர் நேரில் விசாரணை

ADDED : ஜூலை 04, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
சோழவரம்:சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தில், அரசு நிலத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள், தனிநபர் வசதிக்காக ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் வெட்டி சாய்க்கப்பட்டன.

இது தொடர்பாக வருவாய்த்துறையினர், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொணடு வருகின்றனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் நாராயணன், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின் அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 15 கோடி பனைமரங்கள் இருந்த நிலையில், மெல்ல மெல்ல அழிந்து, தற்போது 5 கோடி மரங்களாக சுருங்கிவிட்டது. பனைமரங்களை அதிகப்படுத்தும் வகையில், கடந்தாண்டு, கடலோர மாவட்டங்களில், ஒரே நாளில் ஒரு கோடி பனை விதையை நட்டு உலக சாதனை படைத்தோம்.

பனை மரங்களை அதிகரிக்கும் வகையில், வாரியம் பனை விதைகளை விதைத்து வரும் சூழலில், தற்போது அரசு நிலத்தில் இருந்தவை வெட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பட்டா இடத்தில் இருக்கும் பனை மரங்களை வெட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பனை மரங்களை வெட்ட கூடாது என நீதிமன்றமும், தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இங்கு, பனை மரங்கள் வெட்டப்பட்டு இருப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பனை மரங்களை வெட்டிய விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

பனை மரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதி என்பது அரசின் கொள்கை முடிவாகும். பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இது தொடர்பாக அரசிடம் மனு அளித்து அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us