/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சோழவரம், திருத்தணியில் ஆர்ப்பாட்டம் துவக்க பள்ளி ஆசிரியர்கள் கைது சோழவரம், திருத்தணியில் ஆர்ப்பாட்டம் துவக்க பள்ளி ஆசிரியர்கள் கைது
சோழவரம், திருத்தணியில் ஆர்ப்பாட்டம் துவக்க பள்ளி ஆசிரியர்கள் கைது
சோழவரம், திருத்தணியில் ஆர்ப்பாட்டம் துவக்க பள்ளி ஆசிரியர்கள் கைது
சோழவரம், திருத்தணியில் ஆர்ப்பாட்டம் துவக்க பள்ளி ஆசிரியர்கள் கைது
ADDED : ஜூலை 04, 2024 01:19 AM

சோழவரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
நேற்று அங்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், 200 பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, 'ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள, அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வு பொது மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும்.
ஒன்றிய அளவில் மட்டுமே கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள், திடீரென சோழவரம் - காரனோடை சாலையில் மறியல் போராட்டத்திற்கு தயாராகினர்.
இதையடுத்து, போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருத்தணி
திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நுழைவாயிலில், 'டிட்டோ ஜாக்' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாநில நிர்வாகி ஞானபிரசன்னா தலைமை வகித்தார். இதில், பொதுச்செயலர் தாஸ் பங்கேற்று, அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ம.பொ.சி., சாலையில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 75 ஆசிரியர்களை கைது செய்து, அக்கைய்ய நாயுடு சாலையில் உள்ள போலீஸ் பேராக்ஸில் தங்க வைத்தனர்.
- நமது நிருபர் -