/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது
மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது
மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது
மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது
ADDED : ஜூன் 13, 2024 01:06 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த மரிக்குப்பம் ஆற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
உடனே சம்பவ இடத்திற்கு எஸ்.ஐ., சுரேஷ் மற்றும் காவலர் வேல்முருகன் ஆகியோர் விரைந்து சென்றனர். அங்கு, இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கடத்த முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
அப்போது, அந்த நபர், போலீசாரை மிரட்டியதும், அவரது கையில் வைத்திருந்த மண்வெட்டியால் போலீசாரை தாக்கியுள்ளார். இதில், காவலர் வேல்முருகன் காயம் அடைந்தார்.
இதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய 'ஹூரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ராமராஜகண்டிகையைச் சேர்ந்த லோகேஷ், 28, என தெரியவந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.