/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/6 வயது சிறுமிக்கு தொல்லை தாயின் 2வது கணவர் கைது6 வயது சிறுமிக்கு தொல்லை தாயின் 2வது கணவர் கைது
6 வயது சிறுமிக்கு தொல்லை தாயின் 2வது கணவர் கைது
6 வயது சிறுமிக்கு தொல்லை தாயின் 2வது கணவர் கைது
6 வயது சிறுமிக்கு தொல்லை தாயின் 2வது கணவர் கைது
ADDED : ஜூன் 13, 2024 01:05 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு, கடந்த 9ம் தேதி உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியின் பாட்டி, அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சிறுமியிடம் டாக்டர் விசாரித்தபோது, தாயின் 2வது கணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், காமுகனை, குழந்தைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.