மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்
மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்
மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்
ADDED : ஜூலை 21, 2024 06:56 AM
திருத்தணி: திருத்தணி அடுத்த சின்னகடம்பூர் மாநில நெடுஞ்சாலையில் திருத்தணி போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம், குருவராஜபேட்டையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில், 20 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, 30 என தெரிய வந்தது. தொடர்ந்து ராமமூர்த்தியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.