/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காலை உணவு திட்டம் துவக்கம் முதல்வர் வருகையால் சுறுசுறு காலை உணவு திட்டம் துவக்கம் முதல்வர் வருகையால் சுறுசுறு
காலை உணவு திட்டம் துவக்கம் முதல்வர் வருகையால் சுறுசுறு
காலை உணவு திட்டம் துவக்கம் முதல்வர் வருகையால் சுறுசுறு
காலை உணவு திட்டம் துவக்கம் முதல்வர் வருகையால் சுறுசுறு
ADDED : ஜூலை 12, 2024 10:51 PM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ளது அரசு நிதி உதவி பெறும் பள்ளியான புனித அன்னாள் துவக்கப்பள்ளி.
இங்கு வரும் 15ம் தேதி முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
இதையடுத்து கீழச்சேரி ஊராட்சியில் வருவாய், ஊரகவளர்ச்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணி உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பம்பரம் போல் சுழன்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.
காலை உணவு திட்ட துவக்க விழாவை முன்னிட்டு அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கட்டடம் வர்ணம் பூசப்பட்டு பளீச்சென மாறியுள்ளது.
பள்ளிக்கு வரும் சாலை மற்றும் பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டு உணவு அருந்தும் இடம் சமையலறை புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இடம் பெறும் உணவு வகைகள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய உணவின் அளவு குறித்து பள்ளி வளாகத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் முதல் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு வரை நெடுஞ்சாலையில் மீடியன் மற்றும் சாலையோரம் மணல், குப்பை அகற்றப்பட்டு துாய்மையாக மாறியுள்ளது.
மீடியன் பகுதியில் வர்ணம் பூசப்பட்டு பளீச்சென மாறியுள்ளது. மீடியன் பகுதியில் கொடிக்கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளது.