/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 426 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை 426 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை
426 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை
426 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை
426 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை
ADDED : ஜூலை 12, 2024 10:50 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும், தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில், இதுவரை 426 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கடந்த 2018ல் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 0-18 வயதுடைய குழந்தைகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மையத்தில் மருத்துவர் ஜெகதீஷ்குமார் தலைமையில், 3 மருத்துவர் மற்றும் 9 செவிலியர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இம்மையம் குறித்து டீன் மருத்துவர் ரேவதி, குழந்தைகள் சிகிச்சை மைய தலைமை மருத்துவர் ஸ்டாலின் ஆகியோர் கூறியதாவது:
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில், இதுவரை, 426 குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
'காக்ளியர் இம்ப்ளான்ட்' எனப்படும் காது கேட்கும் கருவி, 25 குழந்தைக்கும், 29 பேருக்கு கண்புரை லேசர் தெரபி, 26 பேருக்கு பிறவி கண்புரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 115 பேருக்கு பிளவு உதடு மற்றும் அண்ணம் சிகிச்சையும், உடல் ஊனமுற்ற 44 குழந்தைகளுக்கு இலவசமாக சிறப்பு உபகரணம் வழங்கப்பட்டது.
மேலம், வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆண்டுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி 'ஹார்மோன்' ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.