/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சைபர் கிரைம் சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி சைபர் கிரைம் சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி
சைபர் கிரைம் சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி
சைபர் கிரைம் சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி
சைபர் கிரைம் சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி
ADDED : ஜூன் 18, 2024 06:00 AM
சென்னை புறநகரில் மாத துவக்கத்தில் 'பிக்பாக்கெட்' திருடர்கள், 'பிளேடு' போட்டு பணத்தை சுவாகா செய்து வந்தனர். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, பெரும்பாலான பர்சுகளில் பணத்திற்கு பதில், 'கிரெடிட், டெபிட்' கார்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. இது, பிக்பாக்கெட் கும்பல் காணாமல் போனதற்கு முக்கிய காரணம்.
ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, 'ஆன்-லைன்' மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தற்போது, கிரெடிட் கார்டு மோசடி; பொருட்கள் விற்பது, வீடு வாடகை மோசடி என பல, 'சைபர் கிரைம்' குற்றங்கள் அதிகரித்துவிட்டன.
இவற்றை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கு, 'சைபர் கிரைம்' பிரிவு துவக்கப்பட்டது.
குற்றங்கள் அதிகரித்ததால், இரண்டு ஆண்டு களுக்கு முன் மூன்று காவல் மாவட்டங்களுக்கு ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம் என, நான்கு காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
புகார் கொடுப்பவர்கள் நேரடியாக புகார் கொடுக்க முடியாது. முதலில், 'ஆன்-லைன்' வாயிலாக http://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
எனவே, சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, 'ஆன்-லைன்' வாயிலாக தெரிந்து கொள்ளவும் வழி வகை செய்ய வேண்டும் எனல கோரிக்கை எழுந்துள்ளது
-- நமது நிருபர்- -.