/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நடைபாதை வியாபாரிகள் எளாவூரில் சாலை மறியல் நடைபாதை வியாபாரிகள் எளாவூரில் சாலை மறியல்
நடைபாதை வியாபாரிகள் எளாவூரில் சாலை மறியல்
நடைபாதை வியாபாரிகள் எளாவூரில் சாலை மறியல்
நடைபாதை வியாபாரிகள் எளாவூரில் சாலை மறியல்
ADDED : ஜூன் 11, 2024 05:25 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை ஓரம் துராபள்ளம் பஜார் பகுதி அமைந்துள்ளது.
பஜார் பகுதியில், 60க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் இயங்கி வந்தன.
சாலை விரிவாக்க பணிகளுக்காக, மேற்கண்ட கடைகள் அனைத்தும் மூன்று மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டன.
வாழ்வாதாரம் பாதித்து வியாபாரிகள் தவித்து வரும் நிலையில், அதே பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் நிரந்தர இடம் ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தினர்.
அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேற்று எளாவூர் உதவி மின் பொறியாளர் அலுவலகம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையை மறித்து அமர்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற ஆரம்பாக்கம் போலீசார், வியாபாரிகளை சமாதானம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால், தேசிய நெடுஞ்சாலையில், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.