/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 45 தமிழக சிறுவர்கள் பங்கேற்பு தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 45 தமிழக சிறுவர்கள் பங்கேற்பு
தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 45 தமிழக சிறுவர்கள் பங்கேற்பு
தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 45 தமிழக சிறுவர்கள் பங்கேற்பு
தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 45 தமிழக சிறுவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 11, 2024 05:24 AM

சென்னை: மேற்கு வங்கத்தில் துவங்கியுள்ள ஜூனியருக்கான தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தில் இருந்து, 45 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றுள்ளனர்.
வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் கூட்டமைப்பு ஆதரவில், மேற்கு வங்கம் ஸ்போர்ட்ஸ் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், ஜூனியருக்கான தேசிய கிக் பாக்சிங் போட்டி, மேற்கு வங்கத்தில் நேற்று துவங்கியது.
இதில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 27 மாநிலங்களைச் சேர்ந்த 16 முதல் 18 வயதிற்கு உட்பட்ட 500க்கு மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பங்கேற்றுள்ளனர். போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும்,'பாயிண்ட் பைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட்' உள்ளிட்ட வகைகளில் வயது, எடை என, மொத்தம் 410 வகைகளில் சண்டை பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
இதில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 12 சிறுமியர் உட்பட 45 சிறுவர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாளான நேற்று, எடை சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் துவங்கின. இன்று முதல், எடை வாரியாக போட்டிகள் துவங்குகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்க பொதுச்செயலர் சுரேஷ்பாபு கூறியதாவது:
சமீபத்தில் புனேவில் நடந்த, சிறுவர்கள் மற்றும் கேடட் பிரிவில், தமிழக சிறுவர்கள் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தனர்.
அதேபோல், ஜூனியர் பிரிவிலும் பதக்கங்களை வெல்வோம் என, நம்பிக்கை உள்ளது. இப்போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள், ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஆக., 23 முதல் செப்., 1ம் தேதி வரை நடக்க உள்ள உலக கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.