/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாநில வில்வித்தை போட்டி அகாடமி வீரர்கள் சாதனை மாநில வில்வித்தை போட்டி அகாடமி வீரர்கள் சாதனை
மாநில வில்வித்தை போட்டி அகாடமி வீரர்கள் சாதனை
மாநில வில்வித்தை போட்டி அகாடமி வீரர்கள் சாதனை
மாநில வில்வித்தை போட்டி அகாடமி வீரர்கள் சாதனை
ADDED : ஜூலை 08, 2024 06:16 AM

சென்னை: தமிழ்நாடு வில்வித்தை சங்கம் ஆதரவுடன், சாய்ராம் கல்விக் குழுமம் மற்றும் தயான் சந்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய, 17வது மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன் போட்டிகள், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தன.
கடந்த 5ம் தேதி துவங்கிய இப்போட்டிகள், நேற்று முடிந்தன. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் சென்னையில் இயங்கி வரும் தயான் சந்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், இரு பாலரிலும் சேர்த்து 40 வில்லாளர்கள் பங்கேற்று, 12 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என, மொத்தம் 35 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனையர், அடுத்த மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்பர் என, பயிற்சியாளர்கள் சாமுவேல், சதீஷ், பாலாஜி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.