/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : ஜூலை 08, 2024 06:17 AM

சென்னை: சென்னையில் நேற்று நடந்த மாவட்ட அளவிலான பளு துாக்கும் போட்டியில், 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு பளு துாக்கும் சங்கம் ஆதரவுடன், சென்னை மாவட்ட பளு துாக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான பளு துாக்கும் போட்டி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் நேற்று நடந்தது.
வயது அடிப்படையில், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில், 'ஸ்னாச்' மற்றும் 'கிளீன் அண்டு ஜெர்க்' ஆகிய முறைப்படி, இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சீனியர் பிரிவில் ஆண்களில் 48 வீரர்கள், பெண்களில் 18 வீராங்கனையர் மற்றும் ஜூனியர் பிரிவில் 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் என, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப்போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரர், வீராங்கனையர், அடுத்த மாதம் வேலுாரில் நடைபெறும் மாநில அளவிலான பளு துாக்கும் போட்டியில், சென்னை மாவட்டம் சார்பில் பங்கேற்பர் என, சென்னை மாவட்ட பளு துாக்கும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.