/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அகல ரயில் பாதை திட்டத்திற்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம் அகல ரயில் பாதை திட்டத்திற்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
அகல ரயில் பாதை திட்டத்திற்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
அகல ரயில் பாதை திட்டத்திற்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
அகல ரயில் பாதை திட்டத்திற்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 13, 2024 09:12 PM
திருவள்ளூர்:திண்டிவனம்- நகரி அகல ரயில் பாதை திட்டத்திற்கு இடம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை வட்டங்களில் உள்ள கிராமங்களில் திண்டிவனம்-நகரி அகல ரயில் பாதைத் திட்டத்திற்காக நில எடுப்பு செய்யப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை பெறப்படாத பட்டதாரர்களுக்கு சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
பாண்டறவேடு- ஜூலை 15, கொளத்துார்-16, பொதட்டூர்பேட்டை--18, கொல்லாலகுப்பம்-19, பத்மாபுரம்-22, பெருமாநல்லூரில்-23-25; ஆதிவராகபுரம்-26, வங்கனுார்-29, கிருஷ்ணமராஜகுப்பம்- --30, விளக்கணாம்பூடி----31, மீசாரகண்டபுரம்-ஆக.1 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாம் நடைபெறும் நாட்களில் இழப்பீட்டுத் தொகை பெறாத பட்டாதாரர்கள், தனி வட்டாட்சியர்- நிலம் எடுப்பு, திண்டிவனம்-நகரி இருப்புப்பாதை திட்ட அலுவலரிடம் நேரில் ஆஜராகி தங்களுடைய நிலம் தொடர்பான பட்டா, பத்திரம், வில்லங்க சான்றின் அசல் ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான்கார்டு நகல் ஆகியவற்றை அளித்து இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.