/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கலெக்டர் அலுவலகத்தில் வீணாகி வரும் சோலார் பேனல் கலெக்டர் அலுவலகத்தில் வீணாகி வரும் சோலார் பேனல்
கலெக்டர் அலுவலகத்தில் வீணாகி வரும் சோலார் பேனல்
கலெக்டர் அலுவலகத்தில் வீணாகி வரும் சோலார் பேனல்
கலெக்டர் அலுவலகத்தில் வீணாகி வரும் சோலார் பேனல்
ADDED : ஜூன் 18, 2024 06:05 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உரிய பராமரிப்பின்றி, சோலார் பேனல், மாடி பூங்கா மற்றும், தொலைதொடர்பு 'டிஷ்' ஆகியவை வீணாகி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகம், 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், விருந்தினர் மாளிகை, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் ஆகியோருக்கான குடியிருப்பு மற்றும் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அலுவலகம் கட்டி, 25 ஆண்டுகள் ஆன நிலையில், கலெக்டர் அலுவலக மொட்டை மாடியில், தொலைதொடர்பு தகவல் பெற, 'டிஷ்', சோலார் வாயிலாக மின்சாரம் பெறும் சாதனம் அமைக்கப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு, கலெக்டர் அலுவலக அறைக்கு அருகில் மாடி தோட்டம் அமைக்கப்பட்டது.
கடந்த, 2017ம் ஆண்டில், வாராந்திர குறைதீர் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் அமர மற்றும் மக்கள் மனுக்கள் எழுதும் கூடம் அமைக்கப்பட்டது.
தற்போது இவற்றை முறையாக பராமரிக்கவில்லை என, அலுவலக ஊழியர்களே குற்றம் சுமத்துகின்றனர்.
இதன் காரணமாக, மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட, சோலார் பேனல், தொலைதொடர்பு தகவல் அறியும் 'டிஷ்' மற்றும் கலெக்டர் அறைக்கு அருகில் உள்ள மாடி தோட்டம் ஆகியவை முறையான பராமரிப்பின்றி, வீணாகி வருகின்றன. எனவே, பராமரிப்பின்றி வீணாகி வரும் சோலார் பேனல், தொலைதொடர்பு, 'டிஷ்' மற்றும் மாடி தோட்டம் ஆகியவற்றை பொதுப்பணித் துறையினர் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.