/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தேர்வீதி விரிவாக்க பணி ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு தேர்வீதி விரிவாக்க பணி ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு
தேர்வீதி விரிவாக்க பணி ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு
தேர்வீதி விரிவாக்க பணி ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு
தேர்வீதி விரிவாக்க பணி ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு
ADDED : ஜூன் 02, 2024 12:53 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும், 'மாஸ்டர் பிளான்' திட்டத்தின் பணிகளை விரைந்து முடிக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்த திட்டத்தின் வாயிலாக, ராஜகோபுர இணைப்பு பாதை, புதிதாக கட்டப்படும் ஐந்து திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சிக் கட்டடம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடக்கின்றன.
நேற்று, சென்னை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த அன்பரசு தலைமையிலான நான்கு பேர் குழு, திருத்தணி முருகன் கோவில் தேர் வீதியில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
ஒரு சில நாட்களில் தேர் வீதி விரிவாக்கம் செய்வதற்கு மண் பரிசோதனை நடைபெற உள்ளது. மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில், விரைவில் தேர்வீதி விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.