/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 24, 2024 11:32 PM

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் இருந்து குருவராஜகண்டிகை நோக்கி செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. அந்த சாலையில் சிறுபுழல்பேட்டை எல்லையில், நிலக்கரியில் இருந்து எரிப்பொருள் மற்றும் மின் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
அந்த தொழிற்சாலைக்கு தினசரி நுாற்றுக்கணக்கான நிலக்கரி லோடு லாரிகள் வருகின்றன. அந்த லாரிகள் அனைத்தும் மேற்கண்ட நெடுஞ்சாலை ஓரம் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகிறது.
எப்போது குறைந்தது, 20 லாரிகள் வரை அந்த சாலையில் நின்றுக்கொண்டிருக்கும். சாலையின் பெரும் பகுதியை நிலக்கரி லாரிகள் ஆக்கிரமிப்பதால், பிற வாகனங்கள் அந்த சாலையில் எதிர் எதிரே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பதுடன், விபத்து அபாய பகுதியாகவும் மாறி வருகிறது. அதற்கு தீர்வு காணும் விதமாக தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தனியாக பார்க்கிங் வளாகம் ஏற்படுத்த வேண்டும்.
மீறும் பட்சத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் நிலக்கரி லாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் மீதும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.