/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஏரி நீர்வரத்து கால்வாய் பாலம் விரிவாக்க பணி துவக்கம் ஏரி நீர்வரத்து கால்வாய் பாலம் விரிவாக்க பணி துவக்கம்
ஏரி நீர்வரத்து கால்வாய் பாலம் விரிவாக்க பணி துவக்கம்
ஏரி நீர்வரத்து கால்வாய் பாலம் விரிவாக்க பணி துவக்கம்
ஏரி நீர்வரத்து கால்வாய் பாலம் விரிவாக்க பணி துவக்கம்
ADDED : ஜூன் 24, 2024 11:33 PM

பொதட்டூர்பேட்டை : பொதட்டூர்பேட்டையில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டைக்கு ஏரிக்கரை வழியாக தார் சாலை அமைந்துள்ளது.
வாணிவிலாசபுரம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. இந்த சாலையின் குறுக்கே ஏரி நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது, இதற்கான பாலம் குறுகலாக இருந்தது. இதனால், எதிரெதிரே வரும் வாகனங்கள் இந்த பகுதியில் ஒன்றையொன்று கடக்க சிரமப்பட்டு வந்தன.
இருசக்கர வாகனஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது.
இதற்காக மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. பாலம் கட்டும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு, வாகன போக்குவரத்திற்கு திறந்து விடப்படும்.
இதையடுத்து, இந்த பகுதியில் நிலவிய போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.