/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலை அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் கோபம் சாலை அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் கோபம்
சாலை அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் கோபம்
சாலை அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் கோபம்
சாலை அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் கோபம்
ADDED : ஜூன் 11, 2024 05:15 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்மாபேட்டை ஊராட்சி. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வரையில் கணேசபுரம் கிராமத்தை இணைக்கும் தார்ச்சாலை 3 ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. எனவே இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் 2.25 கி.மீட்டர் நீளத்திற்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணி துவங்கியது.
தற்போது ஜல்லிக்கற்கள் கொட்டி இரண்டு மாதமாகியும், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறி பகுதிவாசிகள் இருசக்கர வாகனத்தில், நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கிராமத்தின் முக்கிய சாலையை விரைந்து அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.