/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தக்கான் குளக்கரையில் அகற்றப்படாத குப்பை தக்கான் குளக்கரையில் அகற்றப்படாத குப்பை
தக்கான் குளக்கரையில் அகற்றப்படாத குப்பை
தக்கான் குளக்கரையில் அகற்றப்படாத குப்பை
தக்கான் குளக்கரையில் அகற்றப்படாத குப்பை
ADDED : ஜூன் 11, 2024 05:16 AM

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் மலைக்கோவில். மலைக்கோவில் அடிவாரத்தில் பிரம்ம தீர்த்தம் எனப்படும் தக்கான் குளம் அமைந்துள்ளது.
குளக்கரையில் வரதராஜபெருமாள் அருள்பாலிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், தக்கான் குளத்தில் புனிதநீராடுகின்றனர்.
குளக்கரை வளாகத்தில் ஏராளமான குப்பை, அகற்றப்படாமல் சிதறிக்கிடக்கிறது. சுகாதார கேடு நிலவுகிறது.
புனித தலத்திற்கு வரும் பக்தர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் விதமாக, இங்குள்ள குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.