/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆர்.ஓ., வாட்டர்: எம்.எல்.ஏ., உறுதி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆர்.ஓ., வாட்டர்: எம்.எல்.ஏ., உறுதி
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆர்.ஓ., வாட்டர்: எம்.எல்.ஏ., உறுதி
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆர்.ஓ., வாட்டர்: எம்.எல்.ஏ., உறுதி
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆர்.ஓ., வாட்டர்: எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஆக 06, 2024 12:11 AM
திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனையில் நேற்று மாதந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்றார். தலைமை மருத்துவர் ராதிகாதேவி தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., சந்திரன் பேசியதாவது:
திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவ மனையாக உயர்த்த, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 48 கோடி ரூபாயில் ஐந்து அடுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளிடம் கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து என்னிடம் மனுவாக கொடுத்தால் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்கீடு செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது தலைமை மருத்துவர், மருத்துவமனைக்கு, 1,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தார். அதற்கு அவர், ஒரு வாரத்திற்குள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆர்.ஓ., வாட்டர் பிளான்ட் அமைக்கப்படும் என கூறினார். ஆய்வின் போது, அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.